சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடுவது ஒவ்வொரு நடிகைகளின் கனவாகவே இருக்கும்.
அப்படி ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிப்பது பல நடிகைகளின் கனவாகவே உள்ளது. அப்படி ரஜினியுடன் இணையாமலே இருந்த பிரபல நடிகைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் ரஜினியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஜீவிதா ராஜசேகர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினியுடன் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நடிகை ஜீவிதா கடைசியாக 1990 ஆம் ஆண்டு வெளியான ‘மகாடு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். தமிழில் ‘வளைகாப்பு’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் 1988ல் வெளியானது. ‘மகாடு’ படத்திற்கு பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. இதனிடையே சில படங்களை தயாரித்தும் இயக்கியும் வந்தார். அந்த வகையில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ‘சேகர்’ என்ற தலைப்பில் தெலுங்கில் ஒரு படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியுடன் இதுவரை இணைந்து நடித்திராத ஜீவிதா 34 வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். அதுவும் ரஜினியுடன்…!
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான்…
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
This website uses cookies.