எல்லாமே முடிஞ்சிடுச்சு… ஐஸ்வர்யா ராய் விவாகரத்து – அமிதாப் பச்சன் பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!
Author: Rajesh10 December 2023, 9:17 pm
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.
குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்களின் 16 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
ஆம், எப்போதும் தனது கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரத்தை கழட்டாதாக அபிஷேக் பச்சன் தற்போது திடீரென திருமண மோதிரத்தை கழட்டி வீசியுள்ளார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய் உடன் அவருக்கு ஏதேனும் மனக்கசப்பா? விரைவில் இவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்களா? என்றெல்லாம் சமூகவலைத்தளத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
பின்னர் ஒட்டுமொத்த பச்சன் குடும்பமும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று போஸ் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வதந்திங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் அமைந்தது. இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லாமே சொல்லியாச்சு, எல்லாமே நடந்துடுச்சு” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
T 4854 – everything said everything done .. so do the done and done the do .. pic.twitter.com/wYrAMetoGo
— Amitabh Bachchan (@SrBachchan) December 8, 2023