நயன் – விக்கி காதலுக்கு முக்கிய காரணமே Ex Lover தானாம் – எப்படி தெரியுமா?

Author: Shree
14 October 2023, 4:32 pm

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதற்கு முன்னர் அவர் சிம்பு மற்றும் நடிகர் பிரபு தேவாவை காதலித்து அவர்களால் ஏமாற்றப்பட்டார்.

இதில் பிரபு தேவா விட்டு சென்றதை நயன்தாரா இன்றுவரை மன்னிக்கவே இல்லை. ஏனென்றால், அவரை நம்பி கணவன் மனைவியாக ஒரே வீட்டில் பல வருடங்கள் வாழ்ந்து பின்னர் ரகசிய திருமணம் செய்துக்கொண்டு இவ்வளவு நடந்த பிறகு தான் விமர்சிக்கப்பட்டதால், கெட்டபெயர் வாங்கியதால் பிரபு தேவாவின் முன்னாள் மனைவியை பேச்சை கேட்டுக்கொண்டு என்னை பிரிந்து சென்றதை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் என கூறியிருந்தார். ஆனால் சிம்புவுடன் ஒரு நல்ல நட்புறவோடு இருந்து வருகிறார்.

நயன்தாரா பிரபு தேவாவால் மிகவும் அசிங்கப்படுத்தப்பட்டார். ஆனால், அதெல்லாம் கூட பரவாயில்லை. அப்படி ஒரு நேரத்தில் தன்னை தனியாக தவிக்க விட்டு சென்றதை எண்ணி எண்ணி அவர் வெறியாக சாதித்து காட்டவேண்டும் என மீண்டும் சினிமாவில் தன்னை நிலைநிறுத்தி ஜெயித்து காட்டினார். அதற்கு பெரிதும் உதவியது விக்னேஷ் சிவன் தானாம்.

நயன்தாரா பிரபு தேவாவை பிரிந்ததில் இருந்துதில் இருந்து அதனால் ஏற்பட்ட அவமானம் உள்ளிட்டவற்றை நினைத்து நினைந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி கிடந்தாராம். அப்போது விக்னேஷ் சிவன் தான் அவருக்கு ஒரு நல்ல நண்பராக ஆறுதல் சொல்லி திரைத்துறையில் மீண்டும் ஜொலிக்க வைத்தாராம். அந்த அரவணைப்பு தான் நயன்தாராவுக்கு விக்கி மீது காதல் மலர்ந்ததாம். இன்று மிகச்சிறந்த ஜோடியாக வாழ்க்கையிலும், தொழிலிலும் இருவரும் சாதித்தி காட்டியுள்ளனர். எனவே நயன்தாராவின் இந்த அசுர வளர்ச்சிக்கு ஒரு விதத்தில் காரணமாக இருந்து பிரபு தேவா தான் என பேசிக்கொள்கிறது சினிமா வட்டாரம்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்