தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர்கள் ரம்பா மற்றும் சில்க் ஸ்மிதா.
ரம்பா தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித்திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் ரம்பா நடித்த முதல் படம் கதிர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான உழவன்.

அவருடைய இரண்டாவது படமான உள்ளத்தை அள்ளித்தா வெற்றி பெற்று அவருக்குப் பெரும் புகழை அள்ளித் தந்தது.
ரம்பா நடித்த குயிக் கன் முருகன் என்ற திரைப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு என பலமொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் அவர் நடித்த மேங்கோ டாலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றார்.
சில்க் ஸ்மிதா ஒப்பனைக் கலைஞராக இவர் திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். வினுச்சக்கரவர்த்தி வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.
தமிழ் சினிமாவில் ரம்பா நடிக்க வந்த 96 ஆம் ஆண்டுகளில் சில்க் ஸ்மிதா நம்முடன் இல்லை.இவர்கள் இருவரும் ரவுடி அன்னய்யா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர்.
இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை 2 உள்ளது. இருவருமே ஆந்திராவில் பிறந்தவர்கள்.
இருவரின் இயற்பெயரும் “விஜயலட்சுமி“