பகத் பாசிலுக்கு மட்டும் கல்யாணம் ஆகலன்னா அதை பண்ணி இருப்பேன்.. வெளிப்படையாக பேசிய இளம் நடிகை..!
Author: Vignesh25 July 2023, 2:30 pm
தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.
இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது. இந்நிலையில் இப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக ரவீனா ரவி நடித்திருப்பார்.
இதனிடையே, படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ரவீனா ரவி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். இவர் டப்பிங் ஆர்டிஸ்ட் என்று தனக்கு தெரியாது எனவும், சேலத்து பொண்ணு மாதிரி இருக்காங்க என்று தன் மனைவி சொன்னதால், அப்படி ஒரு முக்கியமான முகம் தனக்கு தேவைப்பட்டதால் ரவீனா ரவியை தேர்வு செய்ததாக தெரிவித்தார்.
இதனிடையே, ஒரு காட்சியில் பகத் பசிலை கட்டி அணைத்து பின் செல்ல வேண்டும் அப்போது கட்டிப்பிடித்து முடித்த போது சட்டையில், லிப்ஸ்டிக் ஒட்டி இருந்ததாகவும் எப்படி நடந்துச்சு என்று கேட்டதற்கு நான் பண்ணல தானாவே நடந்துருச்சு என்று ரவீனா தெரிவித்ததாக மாறி செல்வராஜ் தெரிவித்தார். பின்னர் அந்த காட்சியை சிஜி-யில் எடிட் செய்து மாற்றினோம் என்று மாரி செல்வராஜ் காமெடியாக கூறியுள்ளார்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பகத் பசிலை கட்டிப்பிடிக்கும் காட்சி பற்றி ரவீனா ரவி பகிர்ந்துள்ளார். கட்டிப்பிடிக்கும் போது பகத் பசில் சட்டையில் லிப்ஸ்டிக் பட்டுவிட்டது என்றும், ஆனால் தான் முத்தம் கொடுக்கவில்லை எனவும், இதை பார்த்த படப்பிடிப்பில் இருந்த அனைவரும் கிண்டல் அடித்துக் கொண்டிருந்ததாகவும், பகத்பசிலுக்கு திருமண மட்டும் ஆகவில்லை என்றால் கூட தான் முத்தம் கொடுத்து இருப்பேன் என்று வெளிப்படையாக ரவீனா தெரிவித்திருக்கிறார்.