பாலிவுட்டை கலக்க போகும் பகத் பாசில்…ஜோடியாக பிரபல நடிகை..!

Author: Selvan
5 December 2024, 7:59 pm

பாலிவுட்டில் புதிய பரிமாணம்

மலையாள சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகி,இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில்.இவர் தன்னுடைய வித்யாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Fahadh Faasil new movie

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படத்தில் நடித்து,பின்பு சூப்பர்டீலக்ஸ், விக்ரம்,மாமன்னன்,வேட்டையன் போன்ற படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் மாஸாக நடித்து,அந்த படம் வசூலை அள்ளியது.தற்போது புஷ்பா-2 வில் முக்கிய வில்லனாக அவதாரம் எடுத்து ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

இதையும் படியுங்க: அடேங்கப்பா..பல கோடிக்கு விலை போன புஷ்பா 2 …OTT ரிலீஸ் எப்போன்னு தெரியுமா..!

இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் ஒரு புது படத்தில் பகத் பாசில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனிமல் படத்தின் புகழ் நடிகை திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Fahadh Faasil and Triptii Dimri pairing

இப்படத்தை இயக்குனர் இம்தியாஸ் அலி இயக்கவுள்ளார். இதன் மூலம் பகத் பாசில் பாலிவுட்டில் புது அவதாரம் எடுக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.

  • Nithya Menon Kisses Director Mysskin தயவு செஞ்சு தொடாதீங்க.. இயக்குநருக்கு முத்தம் கொடுத்த நடிகை : வெளியான பரபரப்பு வீடியோ!
  • Views: - 207

    0

    0