பா.ரஞ்சித் இயக்கும் “வேட்டுவம்”….கெத்தா களமிறங்கும் பிரபல மலையாள நடிகர்…!

Author: Selvan
13 December 2024, 12:46 pm

பா. ரஞ்சித் இயக்கத்தில் பகத் பாசில் புதிய அவதாரம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா.ரஞ்சித்.இவர் முதலில் இயக்கிய அட்டகத்தி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து மெட்ராஸ்,ரஜினியின் காலா,கபாலி என பல வெற்றிப்படங்களை இயக்கினார்.

சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தங்கலான் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.இதனையடுத்து ரஞ்சித் தன்னுடைய முதல் பட ஹீரோவான அட்டகத்தி தினேஷை வைத்து வேட்டுவம் படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படியுங்க: ஒரே விமானத்தில் விஜய்-த்ரிஷா…இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

இது ஒரு கேங்ஸ்டார் படம் போல் உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.படத்தில் தினேஷுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல மலையாள நடிகரான பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Madha Gaja Raja box office collection வசூல் ராஜாவாக மாறிய விஷால்…மதகதராஜா படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா..!