குபுகுபுன்னு வளர்ந்துட்டாரேப்பா… வில்லனா நடிச்சி அசுர வளர்ச்சி அடைந்த பகத் பாசிலின் சொத்து எத்தனை கோடி தெரியுமா?

Author: Shree
8 August 2023, 3:34 pm

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். இவர் தன்னைவிட 13 வயது குறைந்தவரான நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியது.

இந்நிலையில் பஹத் பாசில் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், தொடர்ச்சியாக அடுத்தடுத்த பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பஹத் பாசிலின் முழு சொத்து மதிப்பு ரூ. 50 கோடி இருக்கும் என தகவல் கசிந்து எல்லோரையும் அதிர வைத்துள்ளது.

  • Vijay Wish Good Bad ugly Teaser GOOD BAD UGLY டீசர்.. விஜய் சொன்ன நச் : படக்குழு உற்சாகம்!