தெறிக்கும் மாமன்னன் மீம்ஸ்.. அத கூட பண்ண விட மாட்டீங்களா? தெறித்து ஓடிய பகத் பாசில்..!

Author: Vignesh
2 August 2023, 1:30 pm

மலையாள படங்களின் மாஸ் ஹீரோவான நடிகர் ஃபகத் பாசில் மிகவும் டெடிகேஷனான நடிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்று தான். தன் தந்தையின் அறிமுகத்துடன் சினிமாவில் வந்த இவர் படத்திற்கு படம் புது வித்தியாசமாய் நடிப்பில் மிரள வைத்தார். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதை நன்றாக உளவாங்கி மிகச்சிறப்பாக நடித்து பெயர் வாங்குவார்.

fahadh faasil

நடிப்பு அரக்கனாக இவரை பார்த்து மிரண்டுபோனார்கள் சக மலையாள நடிகர்கள். தமிழில் கூட சூப்பர் டீலக்ஸ், வேலைக்காரன், புஷ்பா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்துள்ளார்.

fahadh-faasil-updatenews360

இந்நிலையில், படம் வெளியாகி கலையான விமர்சனத்தை பெற்று வந்தது. ஆனால், படம் தியேட்டரில் வெளியாகி கொண்டாடப்பட்டதை விட தற்போது ஓடிடியில், வெளியான பிறகு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் கொண்டாடி வருகின்றனர்.

அதிலும், ரத்னவேலு என்ற வில்லன் ரோலில் நடித்த பகத் பாசிலின் கேரக்டரை தான் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, படத்தில் ரத்னவேலு காட்சிகளை வைத்து ஹீரோவை போல் கட் செய்து இணையத்தில் வீடியோக்களை டிரெண்ட்டாக்கி நெட்டிசன்கள் வருகிறார்கள்.

மேலும், பகத் பாசிலும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இருக்கும் கவர் புகைப்படத்தை மாமன்னன் படத்தின் லுக்கை வைத்திருந்தார். அதையும், நெட்டிசன்கள் இணையதளத்தில் கொண்டாடி வரும் நிலையில், பகத் பாசில் அவர் புகைப்படத்தை நீக்கிவிட்டு ஆள விடுங்கடா சாமி என்று கூறுவது போல் பகத் பாசில் இதை செய்திருப்பதாக நெட்டிசன்கள் அதையும் கலாய்த்து வருகிறார்கள்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!