“எப்படி இருந்த மனுஷன்.. அடையாளமே தெரியல”.. விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர்..!

ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான். திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த விஜய்காந்த், அரசியலில் களம் காண ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், உண்மையில் அவரது சொத்தை சேதப்படுத்தியதுதான், அவரை அரசியலில் பிரவேசிக்க வைத்தது.

திமுக ஆட்சியில் இருக்கும் போது சாலை விரிவாக்கம் மற்றும் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்காக, சென்னை கோயம்பேடில் விஜய்காந்திற்கு சொந்தமான திருமண மண்டபத்தின் ஒரு பகுதியை இடித்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், இதற்கு விஜய்காந்த் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதனை இடிக்காமல் கட்டுவதற்கான ஐடியாவும் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், திமுக அரசு அதனை இடித்தது. இதனால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விஜய்காந்த், அரசியல் கட்சிக்கு அரசியல் கட்சியால்தான் பதிலடி கொடுக்க முடியும் என்று எண்ணி, தேமுதிக என்ற கட்சியை உருவாக்கினார்.

அவர் நினைத்ததைப் போலவே, திமுக தலைவர் கருணாநிதியை மிக மூர்க்கத்தனமாக எதிர்த்ததால், எதிர்பார்த்ததை விட தேமுதிக வளர்ந்தது. கூடவே, மிகவும் குறுகிய காலத்தில் தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எந்த அந்தஸ்த்தும் அவருக்கு கிடைத்தது. மேலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவையும் நேரடியாக எதிர்த்து தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். ஆனால், அடுத்த சில காலத்திலேயே அவரது உடல் நலனும், தொடர்ந்து அவரது கட்சியும் சரிவை சந்தித்தது.

சினிமாவில் சாதித்தது போது அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ முயற்சி செய்தார், அதற்கான வேலைகளில் முழுமையாக ஈடுபட்டார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அப்படியே வீட்டில் முடங்கினார்.

எழுந்து நடிக்க முடியாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த்தை கம்பீரமாக திரையில் நடந்து வந்த அவரை இந்த நிலையில் பார்க்கும் பலரும், கண்கலங்குகின்றனர்.

அவ்வப்போது நடிகர் விஜயகாந்தை திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சென்று சந்தித்து வருகின்றனர். அப்படி விஜயகாந்தை பிரபலங்கள் சந்திக்கும் பொழுது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதை பார்த்த விஜயகாந்த் ரசிகர்களும் தொண்டர்களும் உருக்கமாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான நடிகர் விஜயகாந்தின் போட்டோவை பார்த்து நடிகர் ராதாரவி கதறி அழுத வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில் நடிகர் ராதாரவி என் நண்பனை எனக்கே அடையாளம் தெரியவில்லை, நேரில் சென்று பார்க்கலாம் என்றால் அவரது குடும்பத்தினர் அனுமதி மறுக்கிறார்கள் என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விஜயகாந்தின் மகன்கள் அவ்வப்போது அவரது போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ஆறுதல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

8 minutes ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

19 minutes ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

44 minutes ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

57 minutes ago

UPSC தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை… நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற சிவச்சந்திரன் முதலிடம்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. யுபிஎஸ்சி சர்வீஸ் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளுக்காக யுபிஎஸ்சி…

1 hour ago

லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?

ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு…

2 hours ago

This website uses cookies.