சினிமா உலகில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, உச்ச நடிகையாக சிகரம் தொட்டவர். உச்ச நடிகர்களான ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், அஜித், விஜய், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வெற்றி கண்டு உள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
நடிகை மீனா 40 ஆண்டுகளாக சினிமாவில் ஆக்டிவாக உள்ளார், இவர் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இதனிடையே, கடந்த 40 ஆண்டுகளாக நடிகை மீனா சினிமாவில் சாதனை படைத்ததை கவுரவிக்கும் விதமாக தனியார் யூட்யூப் சேனல் ஒன்று மீனா 40 என்று தலைப்பில் விழா எடுத்தது.
இதில் முன்னணி நடிகர் நடிகைகள் பலர் பங்கேற்றனர். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், போனி கபூர் என ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி குறித்தும் நடிகை மீனா குறித்தும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பகிர்ந்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதாவது நடிகை மீனா படையப்பா படத்தில் நீலாம்பரி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம்.
இதை அவரே பல முறை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இதனை ரஜினிகாந்தும் மீனா 40 நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார். ஆனால், நீலாம்பரி கதாப்பாத்திரம் வில்லி வேடம் என்பதால் அது மீனாவுக்கு சரியாக வராது என நடிகர் ரஜினிகாந்த், மற்றும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் மீனாவின் அம்மா ஆகியோர் தெரிவித்து நடிகை மீனாவை சமாதானப்படுத்தி உள்ளனர்.
முன்னதாக இதுகுறித்து பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார். அதாவது மீனாவுக்கு எப்படி நடித்தாலும் வில்லத்தனம் வரவே வராது என்றும், மீனாவின் கண்களும் அவரது நடிப்பும் குழந்தைத்தனமாக இருக்கும் என்றும் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், படையப்பா படம் மட்டும் இல்லை, வேறு எந்த படமாக இருந்தாலும் நடிகை மீனாவுக்கு நெகட்டிவ் ரோல் சுத்தமாக செட்டாகாது என்று கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், மீனா படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடிக்க முடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்தார். நடிகை மீனா கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நாட்டாமை, அவ்வை ஷண்முகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.