நேரலையில் தொகுப்பாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரபல நடிகர்… பெண் தொகுப்பாளரை சீண்டியதால் கைது..!! வைரலாகும் வீடியோ
Author: Babu Lakshmanan26 September 2022, 9:05 pm
திரைப்பட ப்ரமோஷனின் போது பெண் பத்திரிக்கையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் பிரபல மலையாள நடிகர் கைது செய்யப்பட்டார்.
ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் பிரபல தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியா உயர்ந்து, தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவர் மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷி.
தன்னை பேட்டி கண்ட பெண் பத்திரிகையாளரை தாகத வார்த்தியால் திட்டிய மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஷியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் அனுபம் கெர் நடிப்பில் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘பிராணாயம்’ திரைப்படத்தில் அறிமுகமானார்.
அவரது திறமையால் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது வரை 50க்கும் அதிகமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் சூப்பராக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர் நடித்து முடித்துள்ள ‘சட்டம்பி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அப்போது, பெண் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பல கேள்விகளுக்கு அவர் அமைதியாகவும் இருந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பேட்டியை முடித்துக் கொள்ளலாமா..? என்று தொகுப்பாளரிடம் ஸ்ரீநாத் பாஷி கேட்டுக் கொண்டே, கேமராவை ஆப் செய்யுமாறு கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுத்து கேமராவை அந்தக் குழுவினரும் ஆப் செய்துவிட்டனர்.
பின்னர், கோபமடைந்த ஸ்ரீநாத் பாஷி, பெண் பத்திரிகையாளரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியுள்ளார். இதனால், அந்த யூடியூப் சேனல் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து, பெண் பத்திரிகையாளர் தரப்பில் இருந்து புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், இன்று நடிகர் ஸ்ரீநாத் பாஷியை மரடு போலீசார் கைது செய்தனர். பின்னர் நடிகர் காவல் நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீநாத் பாஷி, தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு, நேரலையிலேயே கெட்ட வார்த்தையில் பதிலளித்து, தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் எப்போது நடந்தது என தெரியாத நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.