ஜீ தமிழ் “ராக்ஸ்டார் ரமணியம்மாள்” திடீர் மரணம் – பேரதிர்ச்சியில் திரையுலம்!
Author: Shree4 April 2023, 1:19 pm
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சரிகமபா’ மூலம் 2017ஆம் ஆண்டு பெரும் புகழ் வெளிச்சத்து வந்தவர் பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள். இவர் சிறுவயதில் இசை கற்கத் தொடங்கி பின் குடும்ப சூழல் காரணமாக வீட்டு வேலைகள் செய்து வந்துள்ளார்.
இருந்தாலும் பாடல் பாடுவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை திருமண நிகழ்ச்சிகளிலும் பாடி வந்துள்ளார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்திலேயே பாடகியாக ரமணியம்மாள் அறிமுகமானார்.
அதன் பின்னர் பரத் நடித்த காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி பாடலைப் பாடிய மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். தொடர்ந்து சில படங்களில் பாடி வந்த ரமணியம்மாள் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடி நடுவர் , ஆடியஸ், போட்டியாளர்கள் என எல்லோரையும் பிரம்மிக்க செய்தார்.
அதன் பின்னர் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஹரிதாஸ், ஜூங்கா, சண்டக்கோழி 2, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா மற்றும் காப்பான் ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் 63 வயதான ரமணியம்மாள் உடல்நிலை குறைவால் இன்று காலை மரணமடைந்துள்ளார். இந்த திடீர் மரணம் திரையுலகை சேர்ந்தவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.