இது சிவகார்த்திகேயன் பொங்கல் டா… குடும்பங்கள் கொண்டாடும் “அயலான்” !
Author: Rajesh12 January 2024, 8:46 pm
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்தாண்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் Mission : Chapter 1 உள்ளிட்ட திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி மகுடம் சூட்டியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ’கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் போட்டிபோட்டுக்கொண்டு வசூல் ஆகி வருகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் இருந்து பல தடைகளை தாண்டி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அயலான் திரைப்படம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்திற்கு செம டஃப் கொடுத்துள்ளதாம். ஏலியன் காட்டும் அன்பில் சிவகார்த்திகேயன் அதை அரவணைக்கிறார். படத்தின் VFX காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த கிராபிக்ஸ் காட்சிகள் தமிழ் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திருக்கிறது. எனவே வழக்கம் போல குழந்தைகளை கவரும் சிவகார்த்திகேயன் படமாக இல்லாமல் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை சேர்ந்து கொண்டாட வைக்கும் படமாக அயலான் உள்ளது படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது.