தமிழ் சினிமாமவில் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். இவருடன் நடிக்க நடிகைகள் போட்டி போடுவதுண்மடு.
பெரும்பலும் ஹிட் படங்கள் மட்டும் கொடுக்கும் விஜய், ஆரம்பத்தில் ஹிட் படங்களை கொடுக்க தடுமாறினார். எத்தனையோ படங்கள் வந்தாலும், அவருடைய காதல் திரைப்படங்கள்தான் இன்னும் நம் கண்முன்னே நிற்கும்.
அதில் ஒன்றுதான் துள்ளாத மனமும் துள்ளும். அருமையான காதல் கதையை அழகாக எடுத்திருப்பார் இயக்குநர் எழில்.
இந்த படம் சாரில் சாப்ளின் படத்தின் City Lights படத்தின் தழுவல் என்றாலும், கதைக்காக நிறைய காட்சிகள் மாற்றப்பட்டது.
இந்த படத்தின் பெயர் முதலில் ருக்மணிக்காக என இருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி துள்ளாத மனமும் துள்ளும் என மாற்றினார்.
வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் பின்னர் விஜய்தான் கமிட்ஆனார். அதற்கு முன் இந்த படத்தின் கதைக்கு நடிகர் முரளி தான் சூட் என அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சிம்ரனுக்கு முன் ரம்பாவைதான் இந்த படத்தற்கு கமிட் செய்தனர்.
பின்னர் இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களை மாற்றி விஜய் சிம்ரன் என நட்சத்திர பட்டாளமே நடித்தது
1999ல் வெளியான இந்த படம் விஜய் படத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின. இன்றும் தொலைக்காட்சிகளில் இந்த படத்தை ஒளிபரப்பினாலும் பார்க்க ஒரு கூட்டமே உள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
சர்வதேச சந்தையில் நிலவும் விலை பொறுத்தே தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே…
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
This website uses cookies.