வசனமே இல்லாமல் மாஸ் காட்டிய ஹீரோ…விருதுகளை வாரி குவித்த சூப்பர் ஹிட் படம்..!
Author: Selvan11 February 2025, 5:13 pm
வசனங்களே இல்லாமல் பல கோடி வசூல்
2012 ஆம் ஆண்டு வெளிவந்த பர்ஃபி திரைப்படம் உலகளவில் அனைவருடைய பாராட்டை பெற்று விருதுகளை வாரி குவித்தது.
பொதுவாக சினிமா என்று சொன்னாலே ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தெறிக்க விடும் வசனங்கள் இருந்தால் தான் ரசிகர்கள் அதை விரும்பி பார்ப்பார்கள்,அதுவும் குறிப்பாக ஹீரோவுக்கு மாஸ் பஞ்ச் வசனங்கள் இல்லையென்றால்,அந்த படம் மொக்க படம் என்று மட்டம் தட்டும் இந்த காலகட்டத்தில்,2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பாலிவுட் திரைப்படம்,இப்படியும் ரசிகர்களை கவர முடியும் என ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: சிவாஜி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை..படாத பாடுபடும் “பராசக்தி” திரைப்படம்.!
அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த பர்ஃபி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இப்படத்தில் ஹீரோவாவுக்கு வசனங்கள் ஏதும் இல்லாமல் வெறும் உணர்ச்சிகளை மையப்படுத்தி மிக அழகாக இயக்குனர் எடுத்திருப்பார்,படத்தில் ரன்பீர் கபூர் காது கேளாத,வாய் பேச முடியாத ஒரு இளைஞனாக நடித்து அசத்தியிருப்பார்,ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ப்ரியங்கா சோப்ரா நடித்திருப்பார் என்று சொல்லுவதை விட வாழ்ந்திருப்பார்.

காதல்,நகைச்சுவை போன்ற இடங்களில் வெறும் கண் பேசும் வார்த்தைகளால் இருவரும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்திருப்பார்கள்,வெறும் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம்,உலகளவில் 175 கோடி ரூபாய் வசூல் செய்து மாஸ் காட்டியது.
மேலும் பர்ஃபி திரைப்படம் உலகளவில் கிட்டத்தட்ட 68 விருதுகளை வாங்கி குவித்தது,படத்தின் இசை மற்றும் பாடல்கள் இன்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.ஹீரோவிற்கு வசனங்களே இல்லாமல் மாஸ் ஹிட் படத்தை கொடுக்க முடியும் என்பதை பர்ஃபி படம் நிரூபித்து வெற்றி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.