47 வயதில் திடீர் திருமணம்… விஜய் பட வில்லன் நடிகர் வெளியிட்ட போட்டோஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2024, 12:01 pm

தற்போதைய காலத்தில் திருமணத்தில் அதிகம் நாட்டம் இல்லாமல் பல பிரபலங்கள் உள்ளனர். சில பிரபலங்கள் திருமணமே செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் 47 வயதான பிறகு திருமணம் செய்துள்ளார் பிரபல நடிகர். தெலுங்கு சினிமாவின் பிரபல குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரான பென்மேட்சா சுப்பராஜூ, திருமணம் செய்து கொண்டு தனது பேச்சுலர் வாழ்க்கைக்கு முடிவு கொடுத்துள்ளார்.

பாகுபலி பட நடிகர் 47 வயதில் திருமணம்

தெலுங்கில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வரும் இவர், தமிழில் “எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி,” “போக்கிரி,” “சரவணா,” “ஆயுதம்,” “ஆதி,” “பாகுபலி 2,” “அசுரகுரு” ஆகிய படங்களில் இவரது நடிப்பு பளிச்சிட்டுள்ளது.

Actor Subbaraju gets Married at 47

தமிழுடன் சேர்த்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: தனுஷ் உடன் யாருமே வாழ முடியாது… விவாகரத்துக்கு பிறகு பிரபலம் பகீர்!

தற்போது 47 வயதான சுப்பராஜூ, தனது திருமண தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். கடைசியில் நானும் சிக்கிக் கொண்டேன் என புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.

Subbaraju Gets Married

சுப்பராஜூ 2003ஆம் ஆண்டு வெளியான “கட்கம்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக வலம் வந்தார்.

இப்போது குடும்ப வாழ்க்கையைத் தொடங்கிய சுப்பராஜூக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

  • Ajith Kumar racing photos viral வீழ்வேனென்று நினைத்தாயோ:விபத்துக்கு பின் மீண்டும் ரேஸில் சீறிய அஜித்…வைரலாகும் வீடியோ…!
  • Views: - 127

    0

    0