மருத்துவமனையில் பிரபல வாரிசு நடிகர் : தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.. தமிழ் திரையுலகத்தில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2023, 8:50 am

தமிழ் திரையுலகத்தில் திடீர் பரபரப்பாக பிரபல வாரிசு நடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரது மகன் பிரபு. இவரும் தமிழ் சினிமாவில் நடிகராகி அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்தார்.

100க்கும் அதிகமான படங்களில் பிரபு நடித்து 80s காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தொடக்கத்தில் ஹீரோவாக தனக்கென முத்திரை பதித்த நடிகர் பிரபு தற்போது குணசித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் விஜய் நடித்த வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தான் நடிகர் பிரபுவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நடிகர் பிரபுவுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் செய்தனர்.

இந்த வேளையில் சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுநீரகத்தில் இருந்த கல் டாக்டர்கள் குழுவினரால் அகற்றப்பட்டுள்ளது. லேசர் வகையை சேர்ந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி மெட்வே மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் பிரபல திரைப்பட நடிகர் பிரபு பிப்ரவரி 20 இரவு சிறுநீரக பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பின் பொதுவான மருத்துவ சோதனைகளுக்கு பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 486

    0

    0