PS 1: ‘வல்லவரையன் வந்தியத்தேவனாக பிரபல நடிகர் நடித்திருந்தால் இப்படி தான் இருக்குமாம்’.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!
Author: Vignesh14 October 2022, 1:00 pm
கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன்.
நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டுகிறது.

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். இதில், ரசிகர்களை அதிகம் கவர்ந்த கதாபாத்திரங்களில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரமும் கார்த்தி நடித்த வந்தியதேவன் கதாபாத்திரம் தான். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் நடிக்க தேர்வானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ஏற்கனவே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இதனிடையே, கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை நிராகரித்ததாக கூறப்பட்டது.
இதோ அந்த புகைப்படம்..

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் பொன்னியின் செல்வன் படத்தில் ஒருவேளை நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று போஸ்டர் டிசைன் ஒன்றை ரசிகர்கள் பலரும், இணையத்தில் வைரலாக்கி வந்தநிலையில், தற்போது
வந்தியதேவனாக ரஜினிகாந்த் நடித்திருந்தால் எப்படி இருக்கும் ரசிகர்கள் பலரும் கற்பனை செய்து புகைப்படம் ஒன்றை வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..