முதல்ல கிளம்பு.. அதெல்லாம் பண்ண முடியாது.. கொலை வழக்கில் சிக்கிய பிரபல நடிகரை துரத்தி விட்ட மனோரமா..!

Author: Vignesh
3 February 2024, 5:52 pm

தமிழ் சினிமாவில் 70, 80 களில் கொடிக்கட்டி பறந்த நாகேஷ் மற்றும் மனோரமா காமெடி ஜாம்பவான்களில் முக்கியமானவர்கள் என்று கூறலாம். அந்தகாலக்கட்டத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் இணைந்து நடித்து மிகப்பெரிய ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது நாகேஷ் மற்றும் மனோரமா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது.

nagesh manorama

அதற்கு என்ன காரணம் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, நடிகர் நாகேஷ் அவர்களின் மனைவியின் தம்பி, அப்போது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாகேஷ்க்கு சம்பந்தம் இருப்பதாக கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

nagesh manorama

இதை எப்படியாவது சமாளிக்க நாகேஷ், மனோரமாவை சந்தித்து பேசியதாகவும், அந்த வழக்கில் தனக்கு சாட்சியாக இருக்கும் படி நாகேஷ், மனோரமா கேட்டுள்ளாராம். மேலும், அன்று உங்கள் வீட்டில் நான் இருந்ததாக கூற வேண்டும் என்று நாகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், மனோரமா அப்படி சாட்சி சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக கூறி உதவி செய்ய மறுத்துவிட்டாராம். இதனால் நாகேஷ் மனோரமா மீது கடும் கோபத்தில் இருந்தாராம்.

nagesh manorama

இதனிடையே, அதன்பின்னர் நாகேஷ் நிரபராதி என்று இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் மனோரமா – நாகேஷ் இடையில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பல நாட்கள் சந்திக்காமல் இருந்து வந்ததாகவும், இந்த சம்பவத்தை சில ஆண்டுகளுக்கு முன் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்த நிலையில், தற்போது வைரலாகி வருகிறது.

nagesh manorama

2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளியான 23ம் புலிகேசி படத்தில் நாகேஷ் மற்றும் மனோரமா இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 27 வருடம் கழித்து மீண்டும் நாகேஷ் உடன் ஜோடி சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 389

    0

    0