விஜய் தன் சொந்த அம்மா அப்பாகிட்டயே பேசுறதில்ல: அப்புறம் இத செய்வாரா..? விஜய்யை தாக்கி பேசிய பிரபல தமிழ் நடிகர்..!

Author: Rajesh
5 March 2023, 10:04 am

80ஸ் மற்றும் 90ஸ் காலக்கட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக கொடிக்கட்டி பறந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். கதாநாயகனாகவும் வில்லனாகவும் பல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மக்கள் வரவேற்பை பெற்று வந்தார். திடீரென சில ஆண்டுகளுக்கு முன் தன் மகன் தனுஷின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவரது பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பேட்டிகளில் பங்கேற்று பேசி வரும் நெப்போலியன், தனது சினிமா வாழக்கை அதில் தாம் சந்தித்த பிரெச்சனைகள், நல்ல நிகழ்வுகள் அனைத்தையும் பகிர்ந்து வருகிறார்.

அதில் விஜய்க்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் கேட்டதற்கு, போக்கிரி படத்தின் போது விஜய் தன்னை அவமானப்படுத்தியதாகவும், அதனால் அவருடன் மன கசப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம், ‘நீங்களும் நடிகர் விஜய்யும் பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைந்து நடிப்பீர்களா? என கேட்டதற்கு பதில் அளித்த அவர், “எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது.

அதன் பின்னர் 15 ஆண்டுகளாக நாங்கள் பேசிக்கொல்வத்தில்லை. நான் விஜய்யுடன் நடந்த பிரச்சனைகளை மறந்து மீணடும் இணைந்து நடிக்க தயார். அதற்கு அவர் தயாரா? விஜய் தன் சொந்த அம்மா அப்பாவிடம் கூட பேசுவதில்லை என்ற செய்தி அமெரிக்கா வரை வந்துள்ளது. இந்த தகவல் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை. முதலில் விஜய், அம்மா அப்பாவிடம் சமரசம் ஆகட்டும்” என்று கூறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி