பிரபல நடிகர் திடீர் மரணம்… மாரடைப்பு ஏற்பட காரணம் இதுவா? திரையுலகினர் அதிர்ச்சி!!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2023, 8:52 am

பிரபல நடிகர் திடீர் மரணம்… மாரடைப்பு ஏற்பட காரணம் இதுவா? திரையுலகினர் அதிர்ச்சி!!

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் மாரடைப்பு காரணமாக காலமானார். புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் என்.எம் பாதுஷா நடிகர் இறந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது, இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் மம்முட்டி மற்றும் சுரேஷ் கோபி நடித்த ஷாஜி கைலாஸ் திரைப்படமான ‘தி கிங்’ மற்றும் சிஐடி மூசாவில் பயங்கரவாதியாக நடித்த விக்ரம் கோர்படே போன்ற பாத்திரங்களள் மூலம் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் 1992-ல் ‘செந்தமிழ்பாட்டு’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தமிழில் சேதுபதி, ஐபிஎஸ், முறைமாமன், மேட்டுக்குடி, வல்லரசு, பிரியமானவளேஉள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!