அரசியலில் விஜய்க்கு தான் என்னோட ஆதரவு : பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2024, 1:50 pm
நடிகராக விஜய் நடிக்கும் கடைசி படம் தளபதி 69. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், நரேன், பிரகாஷ்ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு வீச்சில் இறங்குகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி வரும் 2026 தேர்தலில் போட்டியிடும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதையும் படியுங்க: ரசிகர்கள் செய்த வேண்டாத வேலை.. போன் போட்ட எச்சரித்த ரஜினிகாந்த்!!
இந்த நிலையில் தளபதி 69ல் நடித்து வரும் நரேன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, சென்னை பாதுகாப்புக்காக 10 ஆயிரம் கேமிராக்கள் வழங்கப்படுகிறது. குற்றம் நடந்ததும் சிசிடிவி கேமிரா பதிவை கேட்கிறார்கள்.
தளபதி 69 படம் நன்றாக செல்கிறது. விஜய் தமிழ் சினிமாவை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது. விஜய் அரசியலில் சாதிக்க நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.