இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல நடிகர்.?

Author: Rajesh
12 February 2022, 1:25 pm

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப்.ஐ.ஆர்.’ படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில், இஸ்லாமியர்களை தவறாக காட்டியிருப்பதாகவும் கூறி மலேசியா, கத்தார் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்க்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் கணக்கின் பெயரை இர்பான் அகமது என மாற்றியதால் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக விவாதம் எழுந்தது. பின்னர் FIR படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை ட்விட்டர் கணக்கின் பெயராக வைத்தது தெரியவந்துள்ளது

  • Popular Actress Complaint Against Actor Arya நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?