சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல முடிவுகளை எடுத்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
என்னதான் அப்படி செய்திகள் வந்தாலும் அதை அந்த குறிப்பிட்ட நடிகரோ நடிகையோ மனம் திறந்து அறிவித்தால்தான் ஊர்ஜிதமாகும்.
அப்படித்தான் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து ஏராளமான தகவல் வெளியாகின. அதெல்லாம் உண்மையா இல்லையா என்பது குறித்து அவர் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இந்த நிலையில் விஜய்யை வேண்டுமென்றே பத்திரிகையாளர்கள் சிலர் மிரட்டுவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்யை போலவே நடிகர் சூர்யாவும் அதிரடி முடிவெடுத்துள்ளது ரசிர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் சோடை போகாத சூர்யா, காக்க காக்க, நந்தா என அடுத்ததடுத்து ஹிட் படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிக்கும் போதே ஜோதிகாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா 36 வயதினிலே என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். அதன் பின் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
இதற்கு சூர்யாவின் தந்தையும் நடிகருமான சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2D என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கினர்.
தொடர்ந்து இருவரின் படங்களை தயாரித்து வந்த நிலையில், மற்ற ஹீரோ படங்களையும் தயாரித்து அதிலும் வெற்றி தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளனர்.
தயாரிப்பு பணி மட்டுமல்லாமல் பல வியாபாரங்களை செய்யும் சூர்யா, மும்பை விமான நிலையத்தின் பார்க்கிங் ஏலத்தை எடுத்து செம லாபம் பெற்றுள்ளார்.
மேலும் மும்பையில் பல தொழில்களை ஆரம்பிக்க உள்ள சூர்யா, மும்பையில் புதிய வீட்டை வாங்கி அதில் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறியுள்ளார்.
இது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை. இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார், மேலும் ஜோதிகா திருமணத்திற்கு பின் நடிப்பதற்கு தடை போட்டும் அவர் மீறியுள்ளது சிவக்குமாருக்கு பிடிக்கவில்லையாம்.
சூர்யா தன் குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது மேலும் சிவகுமாருக்கு ஆத்திரத்தை கிளப்பியுள்ளதாம். பாலிவுட் திரையுலகில் சூர்யாவை ஒரு முன்னணி நடிகராக மாற்றவேண்டும் என ஜோதிகா முடிவெடுத்துள்ளதால் இருவரும் தற்போது மும்பையில் குடியேறியுள்ளதாக ஒரு தகவல் வருகின்றன.
சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும் போது சிவக்குமாருடன் தங்கும் சூர்யா, மற்ற நாட்களில் ஜோதிகாவுடன் தனி வீட்டிற்கு சென்றுவிடுவதால் கடும் அப்செட்டில் சிவக்குமார் உள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.