ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!
Author: Udayachandran RadhaKrishnan31 March 2025, 10:19 am
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில் சொல்லமலேயே பதிலடி கொடுப்பவர்.
அவர் வாழ்க்கையில் நடந்த மிக கொடூரமான விஷயம் குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராயும், நடிகர் சல்மான் கானும் காதலித்தனர். இது ஊரறிந்த விஷயம் என்றாலும், இருவரும் பிரிந்தது பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.
இதையும் படியுங்க: மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!
பிரிவு பற்றி பேசிய ஐஸ்வர்யா ராய், சல்மான் னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், நல்ல வேளை எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், காதலில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறினார்.

ஷாருக்கான் மற்றும் அபிஷேக் பச்சனுடன் இணைத்து வைத்து பேசினார். வார்த்தைகளால் காயப்படுத்தியது மட்டுமல்லாமல், உடல் ரீதியாகவும் தாக்குதல் நடத்தினார். ஆனால் நான் இதை எதையும் வெளிகாட்டாமல் சினிமாவில் ஈடுபாட்டை அதிகப்படுத்தினேன் என கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டு சல்மானை பிரிந்த ஐஸ்வர்யா ராய், 2007ல் அபிஷேக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது இது குறிதது சல்மான் கானிடம் கேள்வி கேட்கப்பட்ட போது, மகிழ்ச்சி என பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.