மருத்துவமனையில் பிரபல நடிகரின் குடும்பம் : தீபாவளி கொண்டாட்டத்தின் போது வீட்டில் ஏற்பட்ட சோகம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2022, 9:35 am

அமீர் கானின் தாயார் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீபாவளியையொட்டி நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் உற்சாகத்துடன் பண்டிகையை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் அவரது தாயார் ஜீனத்தும் பங்கேற்றிருக்கிறார்.


மும்பையில் உள்ள அமீர்கானின் பஞ்சாகனி இல்லத்தில் இந்த கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் தீபாவளியன்று ஜீனத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து அவர் உடனடியாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது டாக்டர்கள் தொடர்ந்து ஜீனத்தின் உடல் நிலையை கண்காணித்து வந்த நிலையில், தற்போது அவரது உடல் நிலை சற்று முன்னேற்றம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவதாகவும், ஆனால் சில வாரங்களுக்கு தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் நடந்து சில நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுபற்றிய தகவல்கள் தற்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமீர் கானின் குடும்பத்தினர் ஜீனத்தை உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். கடைசியாக காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் அமீர் கான் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி