2009 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான “கில்லி” திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு, “கிரிட்டம்” திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும், “யுவன்” திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழில், அவரது 2வது திரைப்படமான “தடையற தாக்க” அருண் விஜயுடன் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதில் ரகுல் ப்ரீத் சிங் நடித்தது பலருக்குத் தெரியாத ஒன்று.
அதன்பின், “என்னமோ ஏதோ” என்ற படத்தில் நடித்த ரகுல் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, “தீரன்” படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து தமிழில் பெரிய பாராட்டுகளை பெற்றார். இதனால் “தடையற தாக்க” படத்தில் நடித்தது இவர்தான் என்பதும் பலருக்குத் தெரிய வந்தது.
அதன்பிறகு, “ஸ்பைடர்”, “என்.ஜி.கே” உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் சமீபத்தில் வெளியான “இந்தியன் 2” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் அவர், தனது உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்க: அமர்க்களம் படத்தில் வந்த தியேட்டரை ஞாபகம் இருக்கா? முடிவுக்கு வந்தது 55 ஆண்டு கால சகாப்தம்!
சமீபத்தில், 80 கிலோ எடையை தூக்க முயற்சியின்போது ஏற்பட்ட தவறான உடற்பயிற்சியின் காரணமாக மூச்சுப்பிடிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் 6 வாரங்களாக பாதிக்கபட்டுள்ளதாகவும் ரகுல் கூறினார். இதுகுறித்து, “முட்டாள்தனமாக நான் செய்த தவறுதான் இப்படி படுத்த படுக்கையாகிவிட்டேன். இது என் உடல்நலனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு முக்கிய பாடமாக உள்ளது,” என பதிவிட்டார்.
ஒரு வாரத்தில் குணமாகும் என நினைத்த நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தற்போது 6 வாரங்களாக கூட நன்றாக நகர முடியாமல் இருந்ததாகவும், முதுகு வலியைப் பொருட்படுத்தாமல் பயிற்சியை தொடர்ந்ததே இந்த நிலைக்கு காரணமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். “இன்னும் சில வாரங்களில் முழுமையாக குணமாகுவேன்,” என்று அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.