கணவருடன் ஆட்டம் பாட்டம்…சினிமாவுக்கு குட் பை…ஜாலியா ஹனிமூன் சென்ற பிரபல நடிகை…!

Author: Selvan
6 January 2025, 1:40 pm

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தன்னுடைய நீண்ட வருட காதலனை கல்யாணம் செய்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது ஒரு மாதத்திற்கு பிறகு தனது கணவர் ஆண்டனி தட்டிலுடன் ஹனிமூனுக்கு தாய்லாந்து சென்றுள்ளார்.

Keerthy Suresh honeymoon photos

சமீப காலமாக தமிழில் பெரிய அளவில் வெற்றிப்படங்களை கொடுக்காத கீர்த்தி சுரேஷ்,திடீரென தன்னுடைய கல்யாண அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.இவர் சினிமா பிரபலங்களை கல்யாணம் பண்ணுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்,தன்னுடைய 15 வருட நண்பரை ரகசியகமாக காதலித்து வந்துள்ளார்.இவர்களுடைய திருமணம் கோவாவில் நெருங்கிய நண்பர்கள் குடும்பங்கள் முன்னனிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருடைய கணவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர் என்பதால் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இரண்டு முறை திருமணம் நடந்தது.

இதையும் படியுங்க: நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு…திடீர் அறுவைசிகிச்சையால் பரபரப்பில் கோலிவுட்..!

இந்த நிலையில் இவர் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து அட்லீ தயாரித்த பேபி ஜான் திரைப்படத்தில் நடித்தார்.திருமணம் முடிந்த கையோடு பட ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷுக்கு பேபி ஜான் படம் ஏமாற்றத்தையே கொடுத்தது.பேபி ஜான் திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் வசூலில் திணறி வருகிறது.இதனால் படதயரிப்பாளர் அட்லீக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.கடந்த வருடம் முழுவதுமே கீர்த்தி சுரேஷுக்கு சினிமாவில் பெரிய அளவிற்கு வெற்றிப்படங்கள் அமையாவிட்டாலும்,அவருடைய திருமணம் அவருக்கு மிகப்பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் தற்போது தனது கணவருடன் தாய்லாந்தில் எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படங்களிலும் தமிழ் பாரம்பரியத்தை மதிக்கும் விதமாக கழுத்தில் மஞ்சள் தாலியுடன் ஜாலியாக வைப் செய்து வருகிறார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 89

    0

    0

    Leave a Reply