திரிஷாவை அந்த இடத்தில் தொட்டு விளையாடிய நடிகர்… பார்க்கவே அருவருப்பா இருந்துச்சு – சர்ச்சை நடிகை பகிரங்க பேட்டி!
Author: Shree27 August 2023, 7:13 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். தற்ப்போது விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை திரிஷா குறித்து பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான மீரா மிதுன் அதிர்ச்சியான விஷயம் ஒன்றை கூறியுள்ளார். ஆம், நான் த்ரிஷா நடித்துக்கொண்டிருந்த படமொன்றில் சின்ன ரோல் ஒன்றில் நடித்தேன். அப்போது அந்த செட்டில் நடிகை திரிஷாவை தொடக்கூடாத இடத்தில் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தார் பிரபல நடிகர் ஒருவர்.
அது பார்க்கவே அருவருப்பாக இருந்தது. திரிஷாவிற்கு அது பிடிக்கவே இல்லை என்றாலும் அவர் ரியாக்ட் செய்யவே இல்லை. காரணம் எங்க கோபப்பட்டு கத்திவிட்டால் அந்த படவாய்ப்பு போய்விடுமோ என பயந்து சகித்துக்கொண்டு இருந்தார். டாப் நடிகைக்கே இப்படி ஒரு நிலைமை என்றால் என்னை போன்ற சாதரனை நடிகைகளை பற்றி யோசித்து பாருங்கள் என கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. மீராமிதுன் எப்போதும் சர்ச்சையான விஷயங்களை குறித்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.