சூரிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை… வாழ்க்கை ஒரு வட்டம் என்பது சரிதான் போல!
Author: Udayachandran RadhaKrishnan5 December 2024, 1:59 pm
நடிகர் சூரியின் வளர்ச்சியை தமிழ் சினிமாவை உற்று நோக்க வைத்துள்ளது. காமெடியனாக கேரியரை தொடங்கிய சூரி, விடுதலை படம் மூலம் ஹீரோ ஆனார்.
படம் வெளியானதும் பயங்கர ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் சூரியின் நடிப்பை திரையுலகமே புகழ்ந்து தள்ளியது. இதையடுது விடுதலை 2 படம் இந்த மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.
சூரிக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி!
தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கதவை தட்டி வருகிறது. ஏற்கனவே கருடன், கொட்டுக்காளி படத்தில் ஹீரோவாக சூரி மிரட்டியிருந்தார்.
இதையும் படியுங்க: புஷ்பா 2 பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாக்ஷி அகர்வால் : தீயாய் பரவும் வீடியோ!
தற்போது அவர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழுமலை படத்திலும், வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் வெப் சீரியஸை இயக்குபவர் விலங்கு வெப் சீரியஸை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் தான்.
இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். தனுஷ், ஆர்யா, ஜெயம்ரவி, விஷால், விஷ்ணு விஷாலுடன் நடித்த நடிகை சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.