சினிமாவில் கொடிக்கட்டி பறந்த பிரபலங்கள் பின்னர் எந்த தகவலும் இல்லாமல் குடும்பவாழ்க்கையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
ஆனால் பெற்றோர்களும் இல்லாமல், குடும்பமும் இல்லாமல் தன்னந்தனிமையில் வாழ்ந்து வருபவர் நடிகை கனகா.
பிரபல நடிகை கனகா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டு இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியதை அடுத்து தீயை அணைக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழ் சினிமா உலகில் 80, 90 காலகட்டங்களில் சினிமா மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை கனகா. இவர் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இவர் 2007 ஆம் ஆண்டு கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக் குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே முத்துக்குமாரை காணவில்லை. மேலும், இவருடைய திருமண வாழ்க்கை பற்றி இன்று வரை தெரியவில்லை.
முன்னர் நடிகை கனகா பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தது. அந்த வீடியோவில் பேசிய நடிகை கனகா , எனக்கு தற்போது படத்தில் நடிக்க ஆசை வந்துள்ளது.
ஆனால், எனக்கு இப்போது 50 வயது கிட்ட ஆக இருப்பதால் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதற்கு பல விமர்சனங்கள் வந்தது.
சொத்து விவகாரத்தில் அப்பாவுடன் பிரச்சனை, கை கூடாத காதல், கை விட்ட கணவர், பல வருடங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் தனிமை வாழ்கை என பல துயரங்களை சந்தித்துள்ளார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டு கனகா இறந்து விட்டதாக பல வதந்திகள் வந்தபடியாக இருந்தன. ஆனால் அதனை மறுத்து தன்னுடைய தனிமை வாழ்கையினை கடத்தியுள்ளார் நடிகை கனகா.
இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று கனகா வீட்டில் இருந்து கரும்புகை வருத்தாக அங்குள்ள மக்கள் கூறவே அங்கு விரைந்தனர் தீயணைப்பு துறையினர்.
ஆனால் தீயணைப்பு வீரர்களை உள்ளே நுழைவதற்கு திட்டியதாகவும், நீண்ட நேரத்திற்கு பிறகே அனுமதித்தாகவும் கூறப்படுகிறது. உள்ளே தீயணைப்பு வீரர்கள் நுழைந்த போது வீடெங்கும் குப்பைகள், மூட்டை கட்டிய துணி என வீடே குப்பை கூலமாக இருந்திருக்கிறது.
இதனை சிரமப்பட்டு கடந்துதான் தீயை அணைத்துள்ளார் தீயணைப்பு வீரர்கள். இந்த நிலையில் நடிகை கனகா வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது விளக்கு கீழே விழுந்து தீ பிடித்தது.
பின்னர் தீ அருகில் இருந்த துணிகளில் பரவியது. இதனால் தீப்பற்றி துணிகளில் எரியத் தொடங்கியது. இதனால் அவரது வீட்டில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் கனகா அலறி தீயணைப்பு துறைகே தகவல் தெரிவித்து இருக்கிறார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை.
இருப்பினும் கனகா வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்தில் பிரச்சனை, அப்பாவின் கொடுமை, மறைந்த தாய், தாய் வாங்கிய வீட்டில் தனிமை வாழ்கை என நரக வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் கனகா.
மேலும் சொத்துக்களை தன்னிடம் இருந்து யாரவது பறித்து விடுவார்களோ என்ற அச்சத்திலேயே வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்கி வந்துள்ளார் கனகா என்று கூறப்படுகிறது.
தான் கடந்த காலங்களில் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை என்பதயே மறந்து தற்போது எந்த ஒரு ஆதரவும் இன்றி தனிமையில் வசித்து வரும் கனகாவை திரையில் முகமில்லையெனில் இதுதான் நிலமையோ என்று பரிதாபத்துடன் பார்க்கின்றனர் ரசிகர்கள்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.