அஜித்துடன் முதன்முறையாக ஜோடி போட்ட பிரபல நடிகை.? இதுவரை இல்லாத புதிய கூட்டணியில் #AK62!!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2023, 8:31 pm
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.கே 62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் நடிக்கும் 62-வது படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் முதன்முறையாக அஜித்துடன் ஜோடி பேடுகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் நயன்தாரா, அரவிந்த் சாமி, சந்தானம் என நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.