மது இருந்தால் தான் தூக்கமே… போதைக்கு அடிமையாகி பாதை மாறிய பிரபல நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 5:11 pm

சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கை படத்தில் வருவது போல இல்லை. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி அமைந்திருக்கும்.

அப்படி தனது வாழ்க்கையில் நடந்ததை எண்ணி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாளத்தைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா ஹிந்தி திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள ஏறக்குறைய அனைத்து மொழிகளிலும் நடித்து பெருமை இவருக்கு உண்டு. தமிழில் இவர் 1995ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய பாம்பே படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். குறிப்பாக கமலுடன் இந்தியன் ரஜினியுடன் பாபா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிஸியாக படங்களில் நடித்து வந்த இவருக்கு 2010 ஆம் ஆண்டு திருமணமானது. திருமணம் ஆன இரண்டு வருடத்திலேயே விவாகரத்தை பெற்று விட்டார். புற்றுநோய் பாதிப்பால் போராடி வென்றவர்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் கூறிய விஷயம் ரசிகர்களை ஷாக் ஆக வைத்துள்ளது. அது என்னவென்றால், இவர் இளம் வயதில் தூங்குவதற்கு முன்பு அதை செய்தால் தான் தூக்கமே வரும் என வெக்கமே இல்லாமல் வெளிப்படையாக கூறி இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

கேமரா முன் தைரியமாக இருக்க மது குடிக்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் மது இருந்தால் தான் தூக்கமே என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

இப்படி போதைக்கு அடிமையாகி தனது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதாகவும், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புற்றுநோய் தனக்கு பாடம் புகட்டியதாகவும் கூறியுள்ளார்.

கடுமையாக போராடி நோயில் இருந்து மீண்டு, குடிப்பழக்கத்தை முழுமையாக விட்டெறிந்த மனிஷா, ல்ல முறையில் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு இறைவனைப் பிரார்த்தித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!