மேம் ஒரு ‘கிஸ்’அடிச்சுகிடுறேன்…நடுரோட்டில் பிரபல நடிகையிடம் அத்துமீறல்.!
Author: Selvan22 February 2025, 4:01 pm
ரோட்டில் முத்தம் அதிர்ச்சியில் பூனம் பாண்டே
பிரபல பாலிவுட் நடிகை ரோட்டில் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர் அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிககையாக ஜொலித்து கொண்டிருப்பவர் பூனம் பாண்டே.
இவர் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி விவாத பொருளாக மாறி இருக்கிறார்,2013 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான நாசா திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்,அது தவிர மாடலிங் துறையிலும் தன்னுடைய தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார் ,இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என பேசி அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார்.
இதையும் படியுங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் கண் கலங்கிய ஆதிக்…’குட் பேட் அக்லி’ தரமான சம்பவமா இருக்குமா.!
சமீபத்தில் கூட நான் இறந்துவிட்டதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்து பின்பு அது ஒரு புற்றுநோய் விழிப்புணர்வுக்காக செய்தேன் என தெரிவித்தார்,தற்போது இவர் ரோட்டில் நடந்து சென்ற போது ரசிகர் ஒருவர் போட்டோ எடுக்க வந்தார்,உடனே இவரும் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது,அந்த ரசிகர் அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்க முயற்சி செய்து அத்துமீறலில் ஈடுபட்டார்,உடனே அங்கிருந்து கோவமாக பூனம் பாண்டே நடந்து சென்றார்.
இந்த செயலை அங்கிருந்த நபர்கள் வீடியோ எடுத்ததன் மூலம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.