ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
Author: Selvan5 January 2025, 12:56 pm
வழக்கறிஞராக களமிறங்கும் ஆர் ஜே பாலாஜி
நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் சூர்யா அடுத்தடுத்து இரண்டு படங்களில் மும்மரமாக நடித்து வருகிறார்.
இவர் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் கேங்ஸ்டார் படமாக உருவாகி வரும் ரெட்ரோ படத்திலும் ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா45 படத்திலும் நடித்து வருகிறார்.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
இதில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடிப்பதாக தகவல்கள் வெளியான மேலும் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் கோவையில் முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார் ஆர் ஜே பாலாஜி.
இதையும் படியுங்க: இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு நீதிமன்றம் செட்டப்பை போட்டு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் படத்தில் வில்லனாக ஆர் ஜே பாலாஜியே நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
இதில் அவர் சண்டை போடும் வில்லனாக அல்லாமல் அவரை எதிர்த்து பேசும் ஒரு வழக்கறிஞராக நெகடிவ் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கடைசியாக வெளிவந்த சொர்கவாசல் திரைப்படத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.தற்போது சூர்யா45 படத்தில் இயக்குனராக மட்டுமின்றி வழக்கறிஞராக நடித்து ரசிகர்களை கவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.