தளபதி69-ல் இணைந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்…எந்த ரோலில் நடிக்கிறார் தெரியுமா..!
Author: Selvan3 January 2025, 2:59 pm
தளபதி69 அப்டேட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் விஜயின் சினிமா கரியரில் கடைசி படமாக உருவாகி வரும் தளபதி 69 படத்தில் தற்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் அரசியலில் இறங்கியுள்ளதால் இதுதான் தன்னுடைய கடைசி படம் என அறிவித்தார்.இப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க,அனிருத் இசையமைக்கிறார்.ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் தளபதி 69 படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே,பாபி தியோல், ப்ரியாமணி, நரேன், பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இப்படம் ஒரு அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: “உங்களுக்கு கன்னிப்பெண் கேட்குதா “…ஆண்களை கடுமையாக தாக்கிய பாடகி சின்மயி…!
இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து மட்டுமல்லாமல் அவர்களுடன் ஒரு சின்ன கேமியோ ரோலில் சேர்ந்து டான்ஸ் செய்வார்,சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான இவர்,எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை ஜாலி வைப்பில் வைத்திருப்பார்.
இவர் கடைசியாக தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுசுக்கு அண்ணனாக நடித்திருப்பார்.தற்போது தளபதி69 படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் பேசப்பட்டு வரும் நிலையில்,இப்படத்தில் இவருக்கு என்ன ரோல் இருக்கும் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.