நீயெல்லாம் விஜயை விமர்சிக்கலாமா? போஸ் வெங்கட்டை விளாசிய பிரபல இயக்குநர்!

Author: Udayachandran RadhaKrishnan
9 November 2024, 11:17 am

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து மாநாட்டை நடத்தி பேசியது இன்றளவும் தமிழகத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

விஜய் மாநாட்டை நடத்தியவுடன் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த ஒரு சிலர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அதில் போஸ் வெங்கட், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம். என பதிவிட்டார்.

போஸ்வெங்கட் கருத்துக்கு எதிராக கமண்ட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல இயக்குநர் அமீர், போஸ் வெங்கட் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: விஜய் டிவி தொகுப்பாளருக்கு நடந்த பாலியல் தொல்லை …தூக்கில் தொங்கிய அப்பா…!பிக்பாஸில் நடந்தது என்ன ?

விஜய்யை மிகவும் கண்ணியக்குறைவாக விமர்சித்திருக்கக் கூடாது, யப்பா உன் கூடவுமா அரசியல் பன்னனும் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கக் கூடாது.

நீங்கள் விமர்சிக்கும் அளவுக்கு விஜய் தரம் தாழ்ந்தவர் அல்ல, விஜயை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள், இத்தனை லட்சம் பேரை காசு கொடுக்காமல், ஒற்றை வார்த்தையால் கூட்டிக் கொண்டு வந்துள்ளார்.

நீங்கள் வேறு விதமாக விமர்சனம் செய்திருக்கலாம், போஸ் வெங்கட்டின் கருத்து ஏற்புடையது அல்ல என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

  • pavni reddy condition on amir for marriage மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?