விஜயகாந்துக்கு லோகேஷ் கனகராஜ் இப்படி ஒரு நெருங்கிய உறவா..? இதுவரை யாரும் அறிந்திராத விஷயம்..!
Author: Rajesh19 March 2023, 5:30 pm
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற தொடர் வெற்றி திரைப்படங்களை இயக்கியதன் தமிழ் மட்டுமல்லாது மொத்த இந்திய திரையுலகில் பிரபலமாக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இதில் இன்னும் சிறப்பம்சம் என்னவென்றால், கைதி திரைப்படத்தின் நிறைய reference’ஐ விக்ரம் படத்தில் உபயோகித்து தனக்கே உரித்தான LCU என்னும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் வகையில் திரைக்கதையை இயக்கியிருந்தார். படத்தின் இறுதி காட்சியில் சிறப்பு தோற்றத்திலும் நடிகர் சூர்யா தோன்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘லியோ’.
இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், லோகேஷுக்கும் விஜயகாந்திற்கும் உள்ள நெருங்கிய உறவு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் வங்கி பணியாளராக இருந்து பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தவர் என பலருக்கும் தெரியும். இதுகுறித்து, பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன் ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
விஜயகாந்த்தின் ராவுத்தர் புரொடக்ஷன்ஸில் சௌந்தர் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். அவர்தான் விஜயகாந்த்துக்கு வரும் கதைகளை எல்லாம் கேட்பாராம். அவருக்கு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஒரு ஆசை இருந்ததாம். அதன்படி மனோபாலாவுடன் இணைந்து ஒரு திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஆனாலும் பெரிதும் வரவேற்பு கிடைக்காததால், அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிடலாம் என்று நினைத்துள்ளார்.
அந்த சௌந்தரின் மகளுக்கு தான் வங்கி பணியாளரான லோகேஷ் கனகராஜ்ஜை திருமணம் முடித்துவைத்திருக்கிறார். இவ்வாறு, லோகேஷ் கனகராஜ், ஒரு கட்டத்தில் தனது வேலையை விட்டுவிட்டு தனது விருப்பத்தினால் சினிமாவில் நுழைந்துள்ளார். அப்படி அவர் இயக்கிய குறும்படம்தான் “களம்”. இக்குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து லோகேஷ், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை அணுகி அவர் இயக்கிய திரைப்படம்தான் “மாநகரம்” என்பது குறிப்பிடத்தக்கது.