மணிரத்னம் படத்திற்கு இளையராஜா இசையமைக்க மாட்டாரா: காரணம் இதுதானா..?

Author: Rajesh
19 February 2023, 7:00 pm

தென்னிந்திய திரையுலகில் பெரிய ஜாம்பவான்களாக கருதப்படுபவர்கள் மணிரத்னம் மற்றும் இளையாஜா. அவரவர் துறையில் இவர்கள் தொட்டதெல்லாம் ஹிட். இதனால், இவர்களது வளர்ச்சியும் எட்ட முடியாத அளவில் உள்ளது. சினியுலகில் ஏகப்பட்ட படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிந்திருக்கின்றனர். இருவருடைய பிறந்தநாளும் ஜூன் 2ம் தேதி என்பது இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை.

முதன் முதலில் மணிரத்னமும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்தது ‘பல்லவி அனு பல்லவி’ என்னும் கன்னட திரைப்படமாகும். அப்போது மணிரத்னம் தனது கேரியரை தொடங்கிய சமயம். ஆனால் இளையராஜா உச்ச பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு, மணிரத்னத்தின் இரண்டாவது படமான மலையாள மொழி திரைப்படத்தில் சேர்ந்து பணிபுரிந்தனர்.

தமிழில் மணிரத்னத்திற்கு முதல் படமாக அமைந்தது ‘பகல் நிலவு’. அப்படத்தில் அமைந்த ‘பூ மாலையே’ என்ற பாடல் செம ஹிட். அதனை தொடர்ந்து, இதய கோயில், மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி போன்ற ஹிட் படங்களில் பணிபுரிந்து வெற்றிக் கூட்டணியாக மணிரத்னமும் இளையராஜாவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தனர். அதன் பிறகு வந்த படம் தான் ‘தளபதி’.

Rajini Ilayaraja - Updatenews360

இப்படத்தில் வரும் ‘ராக்கம்மா கையத்தட்டு’ பாடல் இன்று வரை மக்கள் பேவரைட்டில் டாப்பாக உள்ளது. மேலும் இந்த படம் தான் இவர்கள் இணைந்த கடைசி படமாக அமைந்தது. இப்படத்தின் போது இருவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, மணிரத்னம் – இளையராஜா கூட்டணி அதன் பிறகு இணையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ஏ.ஆர். ரஹ்மானின் வரவால் தமிழ் சினிமா வேறொரு திசையில் மாறிவிட்டது. மணிரத்னம் – ரஹ்மான் கூட்டணியை மக்கள் ரசிக்க தொடங்கினர்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 824

    0

    4