உலகத்திலே அஜித் மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை… புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

Author: Rajesh
6 February 2024, 5:48 pm

தமிழ் சினிமாவில் ஹிட் பட இயக்குனராக 2000 காலகட்டத்தில் வலம் வந்தவர் இயக்குனர் ராஜகுமாரன். நீ வருவாய் என திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குனராக தடம் பதித்தார். அந்த திரைப்படம் இன்று பார்த்தால் கூட மனதிற்கு இதமானதாக இருக்கும். அந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

இதனிடையே பூவே உனக்காக, சூரிய வம்சம், திருமதி தமிழ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகை தேவயானியை 2001ல் திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருத்தணி முருகன் கோயிலில் ரகசிய திருமணம் செய்துக்கொண்டனர். தற்போது இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் உடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ள ராஜகுமாரன், அஜித்திற்கு ஷூட்டிங்கின் போது ஒன்ஸ்மோர் எடுத்தால் பிடிக்காது. இரண்டாவது முறை நடித்தாலும் நான் தானே நடிக்கப்போறேன் அப்படின்னு நினைப்பார்.அவர் ரிகர்சல் பார்க்கவே மாட்டார். நான் அவரிடம் கதை சொல்லும்போது விழுந்து விழுந்து சிரித்தார்.

கொஞ்சம் பிரேக் விட்டு மீண்டும் கதை சொல்ல துவங்கியபோது மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தார். உலகத்திலேயே அவரை போல் ரசித்து கதைக்கேட்ட ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை என ராஜகுமாரன் கூறினார். முன்னதாக ராஜகுமாரன் விக்ரமுக்கு நடிப்பே வராது என்று கூறினார் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் நடித்தபோது சுத்தமாக நடிக்கவே தெரியாது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 419

    0

    0