தனுஷ் கன்னத்தில் அறைந்த பிரபல இயக்குநர்: ஷூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Author: Rajesh
5 February 2023, 6:30 pm

பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தனுஷை, துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தது அவரது அண்ணன் மற்றும் இயக்குனருமான செல்வராகவன் தான். முகம் சுளிக்கும் காட்சிகள் அப்படத்தில் இருந்ததாக எதிர்ப்புகள் வந்தாலும் அப்படம் வெற்றியடைந்தது. இயக்குனர் கஸ்தூரி ராஜா என பெயர் வந்தாலும் அப்படத்தை இயக்கியது தனுஷின் அண்ணன் செல்வராகவன்தான்.

இதனைத் தொடர்ந்து, தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து தான் இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, ஒரு காட்சியில் தனுஷ் சரியாக நடிக்காமல் அதிக டேக்குகள் வாங்கியுள்ளார். செல்வராகவன் பொறுமையாக தனுஷுக்கு சொல்லி கொடுத்திருக்கிறார். ஆனால், தனுஷ் மீண்டும் நிறைய டேக் எடுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த செல்வராகவன் எல்லோர் முன்னிலையிலும் தனுஷுன் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார்.

dhanush - updatenews360

உடனே தனுஷ் அழுதுகொண்டே அறைக்குள் போய்விட்டாராம். அப்போது அப்படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வராகவனிடம் ‘அவர் இப்பதான நடிக்க வந்துருக்கிறார்.. அவரை ஏன் அடிச்சிங்க? என கேட்டிருக்கிறார். மேலும் செல்வராகவனுடைய உதவியாளர்கள் தனுஷை சமாதானம் செய்ய சென்றுள்ளனர். அப்போது தனுஷ் ‘நான் படித்துகொண்டுதானே இருந்தேன்.. ஏன் என்னை கூப்பிட்டு வந்து இப்படி கஷ்டப்படுத்துறாங்க’ என கூறி வருத்தப்பட்டாராம்.

இருப்பினும், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி இருந்த தனுஷ், தற்போது நடிப்பு, பாட்டு, இயக்கம் என்று எல்லா துறையிலும் சாதித்து வருவதை பார்க்கும் போது ரொம்ப பிரமிப்பா இருக்கு’ என இயக்குநர் மித்ரன் ஜவகர் ஒரு பேட்டியில் கூறியதாக சொல்லப்படுகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 525

    3

    0