அஜித்துக்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கும் இயக்குநர்… கூட்டணி அமைத்தால் பிளாக்பஸ்டர் தான்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

Author: Babu Lakshmanan
21 January 2023, 4:22 pm

பொதுவாகவே பெரும்பாலான இயக்குநர்களின் கனவாக இருப்பது நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பதுதான். நடிகர் விஜய் தற்போது இளம் இயக்குநர்களிடம் கமிட் ஆகி வருகிறார்.

அதேபோல, நடிகர் அஜித் அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கால்சீட் தந்துவிட மாட்டார். ஒருவேளை கொடுத்தால், அந்த இயக்குநரையும் அவருக்கு பிடித்து போனால், தொடர்ச்சியாக 2, 3 படங்களை அவருக்கே கொடுத்து விடுவார். அப்படிதான் வினோத்துக்கு நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என அடுத்தடுத்த பட வாய்ப்புகளை வழங்கினார்.

தற்போது, வினோத் கூட்டணியில் இருந்து விலகி அஜித், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ajith - updatenews360

இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகரான ஒருவரும், பிரபல மலையாள படத்தின் இயக்குநருமான அல்போன்ஸ் புத்திரன், அஜித்தை வைத்து படம் எடுக்க 8 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் உருவான கோல்டு படத்தை அல்போன்ஸ் இயக்கியது, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

இந்த நிலையில், அண்மையில் தனியார் சேனலுக்கு அவர் பேட்டியளித்த போது அஜித் படத்தை எப்போது இயக்குவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது:- நான் அஜித்தின் மிகவும் தீவிரமான ரசிகன். அஜித்தை சந்திக்க 8 வருடமாக அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவை நான் தொடர்பு கொண்டு வருகிறேன்.

ஆனால் இதுவரை தனக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மேலும் பிரேமம் படத்தை பார்த்துவிட்டு அஜித் சார் நிவின் பாலிக்கு ஃபோன் செய்து பாராட்டி இருக்கிறார். ஆனால் தனக்கு ஃபோன் செய்யவில்லையே என்று அப்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது.

மேலும், என் வாழ்நாளில் அஜித்தை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் கண்டிப்பாக 100 நாட்கள் மேல் ஓடும் அளவிற்கு ஒரு தரமான மாஸ் ஹிட் படத்தை கொடுப்பேன் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது, எனக் கூறினார்.

அவரது இந்தப் பேட்டியை தொடர்ந்து நடிகர் அஜித், அல்போன்ஸுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று கோரிக்கை விடுக்கத் தொடங்கியுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 562

    0

    0