விஜய்சேதுபதியை காதலிக்கும் விவாகரத்து நடிகை…எங்கேயோ இடிக்குதே..!
Author: Selvan7 December 2024, 9:47 pm
விஜய் சேதுபதியுடன் கெமிஸ்ட்ரி
நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யா சில நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக நடிகை சோபிதாவை கல்யாணம் பண்ண நிலையில் தற்போது சமந்தாவின் பழைய நிகழ்வுகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான சிட்டாடல் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், சமந்தாவின் நடிப்பு ரசிகர்களை மிரட்டியது.
இந்த சூழ்நிலையில், சமந்தா முன்பு அளித்த ஒரு பேட்டி தற்போது வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில், அவரிடம் ரேபிட் ஃபயர் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதையும் படியுங்க: நாங்க ரெடி நீங்க ரெடியா..வெற்றிகரமாக முடிந்த விடாமுயற்சி டப்பிங்..பொங்கலுக்கு வெளியீடு..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிடிக்குமா அல்லது கமல்ஹாசன் பிடிக்குமா? என்று கேட்கப்பட்டது. சமந்தா உடனே “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்” என்று பதிலளித்தார்.
மணிரத்னம் படங்கள் பிடிக்குமா அல்லது கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் பிடிக்குமா? என்ற கேள்வியில், சமந்தா “GVM” என்று கூறினார்.

சிவகார்த்திகேயன் பிடிக்குமா அல்லது விஜய் சேதுபதி பிடிக்குமா?என்ற கேள்விக்கு, நிச்சயமாக விஜய் சேதுபதி தான். ‘பீட்சா‘ படம் பார்த்துவிட்டு அவரை லவ் பண்ணிட்டேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடேயே வைரல் ஆகி வருகிறது.
சமந்தா மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இருவருடைய காதல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.