சாலை விபத்தில் ஒற்றைக் காலை இழந்த பிரபல வாரிசு நடிகர் : திரையுலகினர் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 9:26 pm

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.ஏ ஸ்ரீனிவாஸ் அவர்களது மகனும் ஐராவதா தாரக் ஆகிய கன்னடத் திரைப்படங்களில் உதவு இயக்குநராக பணியாற்றியவர் நடிகர் சூரஜ் குமார்.

மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியருடன் இணைந்து ரதம் என்கிறத் திரைப்படத்தில் நடித்து வந்தார் சூரஜ். சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் படத்தின் போஸ்டரை பகிர்ந்த சூரஜ் “உங்கள் அனைவரின் அன்புடன்” என்று பதிவிட்டிருந்தார்.

கடந்த 20 ஆம் தேதி அன்று தனது பைக்கில் ஊட்டியில் இருந்து மைசூருக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார் சூரஜ். அப்போது தனக்கு முன்னிருந்த ஒரு டிராக்டரை முந்திச் செல்ல முயற்சித்த சூரஜ், கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரில் வந்த டிப்பர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானார்.

பிறகு, சூரஜின் வலது கால் டிப்பர் லாரியின் அடியில் சிக்கி முழுவதுமாக சிதைந்துவிட்டதாகவும் அவர் மைசூரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார் காவல் அதிகாரி ஒருவர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது வலது கால் நீக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவல் கன்னடத் திரையுலகை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ