நடிகையை விவாகரத்து செய்ய போகிறாரா பிரபல கிரிக்கெட் வீரர்..இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!
Author: Selvan5 January 2025, 2:05 pm
இந்திய ரசிகர்களுக்கு மேலும் ஓர் அதிர்ச்சி
தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் விவாகரத்து செய்றது சர்வ சாதாரணமாக மாறி வருகிறது.சினிமாவில் பல பிரபலங்கள் சமீப காலமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட் வீரர்களின் திருமண உறவிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது.ஏற்கனவே இந்திய வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் சமி தங்களுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் சூழலில்,தற்போது இந்திய அணியின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சகல் அவரது மனைவியான நடிகை தனஸ்ரீ வர்மாவை பிரிய போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுடைய திருமணம் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குடும்பங்கள் முன்னிலையில் விமர்சியாக நடைபெற்றது.இவருடைய மனைவியான தன்யஸ்ரீ வர்மா நடன இயக்குனர்,பல் மருத்துவர்,நடிகர் என பல திறமைகளை கொண்டவர்.மேலும் இவர் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்க: ரசிகர்களுக்கு பயங்கர ட்விஸ்ட் கொடுத்த ஆர் ஜே பாலாஜி…சூர்யா45-ல் வில்லனாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்..!
இந்த நிலையில் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் யுவேந்திர சகல் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் திடீரென தன்னுடைய மனைவியுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.இதனால் இவர்கள் இருவரும் பிரியப்போவதாக நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது .மேலும் அவரது மனைவியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்பாலோ செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும் அவர்கள் இருவரிடம் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.இவர்கள் இருவரும் பிரிந்தால் இந்த வருடத்தின் முதல் பிரபலங்களின் விவகாரத்தாக இருக்கும் என கூறப்படுகிறது.