ஒருதடவை முடிவு பண்ணிட்டா அவ்ளோவ் தான்… பெத்தவங்கள நடுரோட்டில் அலைய விட்ட விஜய்!

Author: Shree
19 September 2023, 4:26 pm

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல வெற்றிகளை பார்த்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தந்தை எஸ்ஏசியின் உதவியால் விஜய் ஆரம்பக்கட்டத்தில் சினிமாவில் நிலைத்திருக்க முடிந்தது. அவரது உதவி இருந்ததால் தான் இன்று இந்த உயரத்திற்கு வர முடிந்தது.

ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு விஜய் பெற்ற தந்தை என்று கூட பார்க்காமல் அவருடன் ஜென்ம விரோதியாக இருந்து வருவது பல மேடைகளில் வெளிப்படையாகவே தெரிந்தது. இது அவரது தந்தை எஸ்ஏசிக்கு மட்டும்மல்லாமல் ரசிகர்களையும் வருத்தமடைய செய்தது.

இது குறித்து பேட்டி ஒன்றில் எஸ்ஏசி, “நானும் விஜய்யும் பேசாமல் இருப்பது உண்மைதான். அதை நான் எப்போதுமே மறைத்ததில்லை. ஒருகட்டம்வரைதான் பிள்ளைகள் நமது பேச்சை கேட்பார்கள். பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களுடைய ஆட்டிட்யூட் மாறிவிடும். இது அனைவரது வீட்டிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான். அப்படிதான் ஓர் தந்தையாக நான் கூறும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை” என்றார்.

இதையடுத்து விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் போட்டோ ஒன்று சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பெற்றோரின் 50வது திருமண நாள் விழாவை கொண்டாடும் விதமாக விஜய் அவர்களது வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அவரது அப்பா இல்லை என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். என்னதான் அப்பாவுடன் பிரச்சனைகள் இருந்தாலும் விஜய் தன் அம்மாவுடன் எப்போதுமே பாசத்தோடு தான் இருப்பார்.

ஆனால், சமீபத்தில் பழைய சண்டைகளையெல்லாம் மறந்து தன் தாய் தந்தையை சந்தித்து விஜய் நலன் விசாரித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் விஜய் ஒரு முறை தன்னை சந்திக்க வந்த பெற்றோர்களை வாசலிலே நிற்கவைத்து தனது பவுன்சர்களை அனுப்பி அம்மாவை மட்டும் வரச்சொல் என சொன்னாராம். இதை கேட்டு கடுப்பான ஷோபனா உங்களை அவமதிக்கும் இடத்தில் நான் மட்டும் ஏன் கிளம்புங்க போகலாம் என கோபத்தோடு திரும்பி சென்றுவிட்டாராம். விஜய் ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அதிலிருந்து அவரது குணத்தை மாற்றிக்கொள்வது மிகவும் கடினம் என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…