இசைஞானியை புறக்கணித்து ஏ.ஆர். ரகுமானுக்கு வாக்களித்த LEGEND இயக்குநர்… வெளியான உண்மை!
Author: Udayachandran RadhaKrishnan18 December 2024, 12:58 pm
ஏஆர் ரகுமான் தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர்.
இளையராஜாவிடம் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்த ஏஆர் ரகுமான், மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
முதல் படமே பயங்கர ஹிட்.பாடல்கள் எல்லாமுமே ஹிட் ஆனதால் ஒட்டுமொத்த சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் ஏ.ஆர் ரகுமான்.
அந்த வருடத்தில் சிறந்த இசைக்காக ரோஜா மற்றும் தேவர் மகன் படம் தேர்வாகியிருந்தது. அப்போது இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமான் இருவருக்கும் 6 ஓட்டுக்கள் சமமாக விழுந்தன.
இதையும் படியுங்க: புஷ்பா 2 கூட்டநெரிசல் சம்பவம்.. மூளைச்சாவு அடைந்த சிறுவன் : யார் பொறுப்பு?!
யாரை தேர்வு செய்வது என தேசிய விருதுக் குழு யோசித்த வேளையில், பாலுமகேந்திரா தனது ஓட்டை ஏஆர் ரகுமானுக்கு வாக்களித்தார்.
இளையராஜா ஒரு திறமைசாலி, ஏஆர் ரகுமான் வளர்ந்து வரும் கலைஞர் என்பதால் அவருக்கு வாக்களித்ததாக கூறினார். ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தேசிய விருதை ஏஆர் ரகுமானிடம் பறிக்கொடுத்தார் இளையராஜா.