நல்ல சான்ஸ்-ஆ மிஸ் பண்ணிட்டேன்…கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க இருந்த பிரபல மலையாள நடிகை புலம்பல்..!
Author: Selvan2 January 2025, 7:44 pm
நடிகை ஷோபனாவின் சமீபத்திய பேட்டி வைரல்
தமிழ் சினிமாவில் காலங்கள் கடந்தாலும் சில படங்கள் இப்போது டிவியில் போட்டாலும் மக்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர்.
அந்த வகையில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தை பார்க்காத ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு அந்த படம் காமெடியாக,கிராமத்து மண்வாசனையோடு இருக்கும்,படத்தின் பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் தியேட்டரில் ஓடி மிகப்பெரிய வெற்றிப்படமாக உருவானது.இப்படத்தில் ஹீரோயினியாக நடித்த கனகாவுக்கு இதுதான் முதல் திரைப்படம்,இப்படத்தில் நடித்தது மூலம் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன.
இதையும் படியுங்க: மலேசியாவில் சில்மிஷம்.. நடிகை மீனா உயிரோட இருக்க காரணமே அந்த நடிகர்தான்!
ஆனால் கனகாவுக்கு பதில் படக்குழு முதலில் பிரபல மலையாள நடிகையான ஷோபனாவை தான் நடிக்க வைப்பதாக முடிவு செய்துள்ளனர்.ஆனால் ஷோபனா அப்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால்,அவர் படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.
இந்த தகவலை ஷோபனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.மேலும் மலையாளத்தில் திரிஷியம் படத்திலும் ஷோபனா தான் நடிக்க இருந்ததாகவும்,பின்பு தனிப்பட்ட சூழ்நிலையால் நடிக்க முடியாமல் போய்விட்டது எனவும் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.