ஒரு ஜீவன்தான்…- 80, 90-களின் பிரபல இசையமைப்பாளர் காலமானார்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்..!

Author: Vignesh
7 February 2024, 1:49 pm

திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.

இளையராஜா கோலோச்சிய காலக்கட்டத்தில் உள்ளே வந்தவர் தான் விஜய் ஆனந்த். இவர் கன்னட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்தவர். தமிழ் திரை உலகில் 80, 90களின் காலகட்டத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆனந்த் நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம் உள்ளிட்ட தமிழ் படங்களில் இசையமைத்துள்ளார்.

பல்வேறு படங்களிலும் இசையமைப்பாளராக இசை அமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை படத்தில் ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் பாடல் மூலம் பிரபலமானார். பலர் இளையராஜா தான் இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பார் என்று எண்ணினர். ஆனால், இந்த படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் விஜய் ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு உபதேசம், ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விஜய் ஆனந்த் இசையமைத்துள்ளார். அவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் ஆனந்த் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • Shankar Praises Lappar Panthu Movie அலட்டிக்காம நடிக்கிறாரு…உண்மையிலே அவர் கெத்து தா…பிரபல நடிகரை புகழ்ந்து பேசிய இயக்குனர் சங்கர்…!
  • Views: - 399

    0

    0